வாணாபுரம் அருகே கானாங்காட்டில் இருந்து சின்னகொள்ளியூர் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி கீழே விழுந்து காயம் அடைந்து வரும் சம்பவம் அவ்வவ்போது நிகழ்ந்து வருகின்றன. இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.