மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை பகுதியில் உள்ள சாலையில் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாவதுடன் விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.