தாண்டிக்குடியில் இருந்து கொடலங்காடு காமனூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.