ஆனத்தூரில் குளத்துமேடு பகுதியில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அப்பகுதியில் தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.