செங்கோட்டை தாலுகா பண்பொழி தைக்கா முக்கு பகுதியில் செங்கோட்டை- கடையநல்லூர்- தென்காசிக்கு பிரிந்து செல்லும் பிரதான சாலை சேதமடைந்து ராட்சத பள்ளங்களாக காட்சி அளிக்கிறது. இதேபோன்று செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகிலும் சாலையின் நடுவில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.