குண்டும், குழியுமான சாலை

Update: 2024-05-26 10:50 GMT

கவுண்டம்பாளையம் அருகே ஸ்ரீ லட்சுமி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களும் பழுதாகி வருகின்றன. இதனால் அந்த சாலைகளை பயன்படுத்தவே பொதுமக்கள் தயங்குகின்றனர். எனவே உடனடியாக சாலைகளை சீரமைத்து தர அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்