விக்கிரவாண்டி அருகே சின்னதச்சூரில் இருந்து எசாலம் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், இந்த சாலை வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும்.