ிண்டுக்கல்-நத்தம் சாலையில் பொன்னகரம் முதல் சவுந்தரராஜா பள்ளி வரை சாலை ஒரத்தில் பதிக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள் சீரமைப்பு பணிக்காக பெயர்த்து எடுக்கப்பட்டன. பின்னர் பணி முடிந்ததும் அந்த பேவர் பிளாக் கற்களை முறையாக பதிக்காமல் விடப்பட்டது. இதனால் சாலையோர பாதையில் பேவர் பிளாக் கற்கள் சிதறி கிடப்பதுடன் அந்த பாதையும் மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. மேலும் அந்த பாதையில் நடந்து செல்பவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே பேவர் பிளாக் கற்களை முறையாக பதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.