வடிகால் அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படுமா?

Update: 2024-05-19 11:06 GMT

திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தில் வடிகால் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் வடிகால் அமைக்கும் பணி முழுவதும் நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் நடந்து வரும் சாலை விரிவாக்க பணியால் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர். இந்த மாற்றுப்பாதையில் இருந்து புழுதி பறப்பதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிந்து வடிகால் அமைக்கும் பணியையும் நிறைவு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்