விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை செல்லும் சாலை சீரமைக்கும் பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்து 15 நாட்கள் ஆகியும் சாலையின் நடுவே வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிலர் சாலையில் தாறுமாறாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபத்தால் உயிரிழப்பு ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையின் நடுவே வெள்ளை வர்ணம் பூச விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.