கரூர் மாவட்டம், தாந்தோணி, வெள்ளியணை, பாளையம், குஜிலியம்பாறை வழி வெள்ளியணை தீனா நகர் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் மிக பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.