புவனகிரி அருகே பி.முட்லூரில் உள்ள அப்துல்கலாம் நகரில் சாலை வசதி இல்லை. இதனால் அப்பகுதி மண் சாலையாக காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் அப்பகுதி சாலை சேறும், சகதியுமாக மாறி விடுவதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, அப்பகுதியில் சிமெண்டு சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.