திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பால இணைப்பு சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.