புதுக்கோட்டை மாவட்டம், திருக்கட்டளையில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்லும் ஆலங்குடி இணைப்பு சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்தும் வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.