உடன்குடி அருகே வேப்பங்காடு சடையநேரி கால்வாய் பாலத்தில் இருந்து வீரவநல்லூர் வழியாக பன்னம்பாறைக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாத்தான்குளத்தில் இருந்து உடன்குடி, குலசேகரன்பட்டினத்துக்கு ஏராளமானவர்கள் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.