கிள்ளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளையம்பலத்தில் இருந்து வாழப்பழஞ்சிவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?