சேதமடைந்த சாலை

Update: 2024-04-28 09:07 GMT

பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மிடாலக்காடு மேற்கு சந்திப்பில் இருந்து முகிலவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஒரு கிலோ மீட்டருக்குள் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆலுவிளையில் சாலையில் பள்ளம் ஏற்பட்டு மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி குளம் போல காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்