நிலக்கோட்டை தாலுகா பச்சைமலையான்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்காமன்பட்டியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே அந்த சாலை இதே நிலையில் உள்ளது. இதனால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.