கிடப்பில் கழிவுநீர் கால்வாய் பணி

Update: 2024-04-14 17:09 GMT
விழுப்புரம் அருகே வீ்.புதுப்பாளையம் கெடார் பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணி முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி அவை சாலையிலேயே தேங்கி நிற்பதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்