கரூர் மாவட்டம் புன்னம் சத்திரத்தில் இருந்து காகிதஆலை செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.