ராமநாதபுரம் நகரில் சுவாமி விவேகானந்தர் சாலை என்ற சிகில் ராஜ வீதியில் இணையும் மண்டையன் சந்து பகுதி சேதமடைந்து புழுதி பறக்கும் வகையில் காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே இந்த சாலையை அகலப்படுத்தி பேவர் பிளாக் பதிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?