மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வேகத்தடைகள் இருந்தது. தற்போது அந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளதால் அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் மீண்டும் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.