மேல்மலையனூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.