கரூர் காதப்பாறை ஊராட்சி, வெண்ணெய்மலை ஊராட்சி அலுவலகத்தை ஒட்டிய தார் சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதினால் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் பணி தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.