கோவைப்புதூர் அருகே புட்டுவிக்கி சாலை ஆங்காங்கே உடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழை பெய்தால் அங்குள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். அசம்பாவித சம்வவங்கள் நடைபெறும் முன்பு, அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.