புகார்பெட்டி செய்தி எதிரொலி; தார் சாலை அமைக்கப்பட்டது

Update: 2024-04-07 10:43 GMT

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதி மேலராதாநல்லூர்-அத்திக்கடை செல்லும் சாலையயில் இருந்த இணைப்பு சாலை முறையான பராமரிப்பின்றி இருந்தது. சாலை முழுவதும் குண்டும்,குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது மேற்கண்ட பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.



மேலும் செய்திகள்