குண்டும், குழியுமான சாலை

Update: 2024-03-31 17:16 GMT

தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த கேட் அருகே உள்ள தார்சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பிற வாகனங்களில் சென்று வருபவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதிக வாகன போக்குவரத்து கொண்ட இந்த பகுதியில் தார்சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்