திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியின் பின்புறம் பழனி சாலையில் இருந்து பிரேத பரிசோதனை அறை வழியாக செல்லும் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. குண்டும், குழியுமான அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே சாலையை செப்பனிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?