கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்ல கூடிய சாலையில் குக்கிராமங்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதியில் டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. குறிப்பாக ஜல்லிகற்கள், எம்.சாண்ட் மணல் ஏற்றி செல்லும் லாரிகள் இந்த சாலையில் அதிவேகமாக செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. எனவே அந்த பகுதியில் அதிவேகமாக செல்லும் லாரிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.