பாலக்கோடு தாலுகா காரிமங்கலம் பகுதிக்குட்பட்ட கொத்தாலம் முதல் பாறைகோட்டை வரை சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சாலையின் இருபுறமும் சுமார் 20 அடி பள்ளம் உள்ளது. குண்டும், குழியுமான சாலையில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலை பணிகளை விரைந்து முடித்து தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.