குண்டும், குழியுமான சாலை

Update: 2024-03-17 17:16 GMT
குஜிலியம்பாறை அருகே கருங்கல் கிராமத்தில் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளங்களில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சேதமடைந்த சாலையை அதிகாரிகள் சீரமைப்பார்களா?.

மேலும் செய்திகள்