தர்மபுரி-பாலக்கோடு சாலையில் சோமனஅள்ளி அமைந்துள்ளது. 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்து செல்லும் போக்குவரத்து மையமாக அமைந்துள்ள இந்த பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் உள்ள தார் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனுசாமி, பாலக்கோடு.