சாலை வசதி வேண்டும்

Update: 2024-03-10 16:46 GMT
கீரப்பாளையம் ஒன்றியம் பூதங்குடி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் இருந்து ஏரிமேட்டு தெரு வரை சாலை வசதி இ்ல்லை. இதனால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட அங்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே அங்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்