சிதம்பரம் படித்துறை இறக்கத்தில் வாகன போக்குவரத்து எப்போதும் அதிகமாக காணப்படும். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.