கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் அருகிலேயே கோவிலூர் செல்லும் சந்திப்பு சாலை உள்ளது. இப்பகுதியில் அதிக அளவு பஸ், லாரி, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. காசி விஸ்வநாதர் கோவில் அருகில் மெயின் சாலையில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளதால் பக்தர்கள் சாலையை கடக்கும்போது விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.