பிரம்மதேசம் அருகே முருக்கேரியில் இருந்து காயல்மேடு வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்பு ஏதும் ஏற்படும் முன் அங்கு புதிதாக தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?