விக்கிரவாண்டி அருகே செம்மேடு கிராமத்தில் இருந்து அத்தியூர்திருக்கை வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.