குண்டும், குழியுமான சாலை

Update: 2024-02-25 11:07 GMT

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதி கோதூரில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலை வரை உள்ள தார் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர், நடந்து செல்லும் பொதுமக்கள் இரவு நேரங்களில் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சில நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்