சேலம் காடையாம்பட்டி வட்டம் குண்டுக்கல் கிராமத்தில் ஜோடுகுளி- பையூரான் கொட்டாய் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றன. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் தார்சாலை அமைக்க வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.