திண்டுக்கல்லில், நத்தம் சாலையில் பொன்னகரத்தில் ஆண்கள், பெண்களுக்கு என்று தனித்தனியாக தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர். ஆனால் தொழிற்பயிற்சி நிலையங்கள் முன்பு சாலையில் வேகத்தடை இல்லை. வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.