புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாச்சிக்கோட்டை மேலக்காட்டில் இருந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் வழியாக பிரதான சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.