கோவைப்புதூரில் இருந்து உக்கடம் செல்லும் புட்டுவிக்கி இணைப்பு சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இரவு அந்த வழியாக செல்பவர்கள் குழிகள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயமடையும் நிலையும் உள்ளது. இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
கல்யாணசுந்தரம், கோவைப்புதூர்.