மொடக்குறிச்சி தாலுகா குலவிளக்கு ஊராட்சியில் கூட்டெல்லைக்காடு பகுதியில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரம் தார்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. இது வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களை பதம் பார்த்து வருகிறது. உடனே பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.