ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை சீரமைக்கப்படுமா?