விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் இருந்து இருக்கன்குடி செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.