சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு கமர்சியல் சாலை, லோயர் பஜார் சாலை ஆகியவை சீரமைப்பு பணிக்காக பெயர்த்து எடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், நீண்ட நாட்கள் ஆகியும், சீரமைப்பு பணி முடியவில்லை. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலைகளை உடனடியாக சீரமைத்து தர நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.