சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்நப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்