தேனியை அடுத்த உ.அம்மாபட்டி வேப்பமர தெருவில் புதிதாக சாலை அமைப்பதற்காக பழைய சாலை அகற்றப்பட்டது. ஆனால் இதுவரை அந்த பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் அந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் சாலை அமைக்க வேண்டும்.