திட்டக்குடி அருகே ஒரங்கூரில் இருந்து லெக்கூர் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு அங்கு மேற்கொண்டு சாலை பணியை தொடர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.