மிகவும் மோசமான சாலை

Update: 2024-01-21 12:51 GMT

திருவள்ளூர் மாவட்டம், பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் இருந்து நயப்பாக்கம் செல்லும் சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலை வழியாக தினந்தோறும் நயப்பாக்கம் கிராமத்திலிருந்து வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள், வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்களும் அந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மக்களின் நலன் கருதி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்